-
நமக்குள் நிலைநிற்கிறதும்,
என்றென்றைக்கும் நம்மோடிருப்பதுமாகிய சத்தியத்தினிமித்தம், நான்
மாத்திரமல்ல, சத்தியத்தை அறிந்திருக்கிற யாவரும் சத்தியத்தின்படி
நேசித்திருக்கிறவளும்,
-
தெரிந்துகொள்ளப்பட்டவளுமாகிய அம்மாளுக்கும் அவளுடைய
பிள்ளைகளுக்கும், மூப்பனாகிய நான் எழுதுகிறதாவது,
-
பிதாவாகிய தேவனாலும் பிதாவின் குமாரனாயிருக்கிற
கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலும், கிருபையும் இரக்கமும்
சமாதானமும், சத்தியத்தோடும் அன்போடுங்கூட உங்களோடிருப்பதாக.
-
பிதாவினால் நாம் பெற்ற கற்பனையின்படியே உம்முடைய
பிள்ளைகளில் சிலர் சத்தியத்திலே நடக்கிறதை நான் கண்டு; மிகவும்
சந்தோஷப்பட்டேன்.
-
இப்பொழுதும் அம்மாளே, நாம் ஒருவரிலொருவர்
அன்புகூரவேண்டுமென்று, உமக்குப் புதிய கற்பனையாக எழுதாமல், ஆதிமுதல்
நமக்கு உண்டாயிருக்கிற கற்பனையாக எழுதி, உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன்.
-
நாம் அவருடைய கற்பனைகளின்படி நடப்பதே அன்பு; நீங்கள்
ஆதிமுதல் கேட்டிருக்கிறபடி நடந்துகொள்ளவேண்டிய கற்பனை இதுவே.
-
மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத
அநேக வஞ்சகர் உலகத்திலே தோன்றியிருக்கிறார்கள்; இப்படிப்பட்டவனே
வஞ்சகனும் அந்திக்கிறிஸ்துவுமாயிருக்கிறான்.
-
உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண
பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
-
கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி
நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில்
நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.
-
ஒருவன் உங்களிடத்தில் வந்து இந்த
உபதேசத்தைக்கொண்டுவராமலிருந்தால், அவனை உங்கள் வீட்டிலே
ஏற்றுக்கொள்ளாமலும், அவனுக்கு வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.
-
அவனுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறவன் அவனுடைய
துர்க்கிரியைகளுக்குப் பங்குள்ளவனாயிருக்கிறான்.
-
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு;
காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய
சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப்
பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
-
தெரிந்துகொள்ளப்பட்ட நம்முடைய சகோதரியின்
பிள்ளைகள் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். ஆமென்