அநேகர் சோதனைகள் விலக ஜெபிக்கின்றனர்.
அநேகர் சோதனைகள் ஆசீர்வாதமாக மாறும் என விசுவாசிக்கின்றனர்.
ஆனால் ஏன் இந்த சோதனை? என்று கேட்டு சிந்தித்துப் பார்போர் வெகு சிலரே.
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்... (ஆகாய் 1:5)
நமக்கு வருகின்ற எல்லா துன்பங்களையும், பிரச்சனைகளையும், மனக்கஷ்டமான காரியங்களையும், நன்மைக்கேதுவான கர்த்தரின் சோதனைகளாக எடுத்துக் கொள்வது ஒரு தவறான அணுகுமுறையாகும். நமக்கு வருகின்ற போராட்டங்கள் யாவும் தாவீதுக்கும், யோபுவுக்கும் வந்த விதமாகவே வருகின்றது என எண்ணிவிடக்கூடாது. பல கஷ்டங்கள், பிரச்சனைகள் நம்முடைய சரியற்ற முடிவுகள், தப்பிதமான யோசனைகள், தேவசார்பற்ற செயல்பாடுகள், தேவ
ஆலோசனை சாராத நடவடிக்கைகள் ஆகியவற்றாலும் வர முடியும். எனதே தரம் பிரித்து பார்க்காமல் அனைத்தையும், ஆண்டவர் அனுப்பிய சோதனைகள் என முத்திரையிட்டுவிடக்கூடாது.
அநேகர் சோதனைகள் விலக ஜெபிக்கின்றனர். அநேகர் சோதனைகள் ஆசீர்வாதமாக மாறும் என விசுவாசிக்கின்றனர். ஆனால் ஏன் இந்த சோதனை? என்று கேட்டு சிந்தித்துப் பார்போர் வெகு சிலரே. ஆனால் "உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள்" என்று வேதம் சொல்கிறது.
ஆகாய் தீர்க்கத்தரிசியின் காலத்தில் அக்கால யூதர்கள் எவ்வளவோ பிரயாசப்பட்டும் அவர்களால் நல்ல முடிவுகளைக் காண முடியவில்லை. ஆகாய் தீர்க்கன் அவர்களிடம் வந்து. அதற்காக நன்றாய் ஜெபியுங்கள் என்றோ, உபவாசம் இருங்கள் என்றோ, பொருத்தனை பண்ணுங்கள் எனறோ கூறவில்லை. அவன் உங்கள் வழிகளை சிந்தித்துப் பாருங்கள் என்றான். ஏனென்றால் ஜெபத்தால் விலகுகிற சோதனைகள் உண்டு, உபவாசத்தால் விலகுகிற பிரச்சனைகள் உண்டு, ஆனால் சில பிரச்சனைகளுக்கு இவைகள் மட்டும் போதாது. இவைகளைச் சேர்த்து ஆராய்ந்து பார்த்தலும் அவசியம்.
சிலர் கஷ்டங்கள் அகல கண்ணீர் விட்டு ஜெபிப்பார்கள், கடுமையாக உபவாசிப்பார்கள். பிரபல ஊழியர்களுக்கு ஜெபக்கடிதங்கள் அனுப்புவார்கள். ஆயினும் நாம் இது போன்ற கஷ்டங்கள் நேரிட ஏதாவது ஒரு விதத்தில் காரணமாயிருந்தோமா என்று சிந்திப்பதில்லை.
சில வியாதிகளுக்கு மருந்தும் மாத்திரையும் போதாது. அறுவை சிகிட்சை செய்து தீங்கானப் பகுதிகள் அகற்றப்படவேண்டும். நம்முடைய தகறான சுபாவங்கள், தேவ நீதி சாராத யோசனைகள், கர்த்தருக்கு முதல் முக்கியத்துவம் தராமை, விசுவாசம் சாராத சுயத்திறமை சார்ந்த செயல்பாடுகள் ஆகியவற்றால் தேவன் நமக்காக செயல்படவாய்ப்பில்லாமல் போயிருக்கலாம். உணர்ந்து செயல்பட முன்வந்தால் தேவன் எல்லாவற்றையும் ஆசீர்வாதமாக்குவார்.

இறைவனின் கட்டுப்பாட்டை விரும்பி ஏற்கும் வரை
கவலைகளின் கட்டுகளிலிருந்து விடுதலை இல்லை.

நன்றி : ஜீவ நீரோடை
Note:
உங்கள் வழிகளைச் சிந்தித்துப் பாருங்கள்...