| Article Index |
|---|
| என்ன நடக்கிறது வட இந்தியாவில்? |
| சுதேசி மிஷனெரி இயக்கங்கள் |
| All Pages |
Page 1 of 2
தற்போது செய்திதாள்களில் 'வட இந்தியாவில் கிறிஸ்தவ மிஷனெரிகள் மற்றவர்களை கட்டாய மதம் மாற்றம் செய்கின்றனர்' என்ற செய்தியை அடிக்கடி வெளியிடுகின்றனர். நான் வேதாகம மொழி பெயர்ப்பு மென்பொருள் ஊழியத்தில் இருப்பதால் வட இந்தியாவில் நடைபெறும் பல்வேறு ஊழியங்களை பற்றிய ஒரு விரிவான கட்டுரை எழுத முற்பட்டு இருக்கிறேன். இது வட இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உங்களுக்கு கூறும்.
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஐரோப்பிய கிறிஸ்துவம் மிஷனெரிகளின் வருகை காரணமாக பாரதத்தின் தென் பகுதியில் ஆரம்பித்தது. அவர்களின் அயராத பணியால் தென்பகுதியின் கடலோர பகுதிகளில் ஒரளவு மக்கள் தங்கள் பாவ வழிகளை விட்டு மனம் திரும்பி இயேசுவை ஏற்றக் கொண்டனர் சிலர். இவ்வாறு சிறிது சிறிதாக கிறிஸ்துவம் பாரதத்தில் பரவத் தொடங்கியது. இருந்தாலும் ஆங்கிலேயர்கள் கிறிஸ்தவத்திற்கு எதிராகவும் இல்லை ஆதரவாகவும் இல்லை.( எல்லா ஆங்கிலேயர்களும் கிறிஸ்தவர்கள் இல்லை) அவர்களின் ஆட்சி அதிகாரத்தை கிறிஸ்துவம் பாதிக்காதவரை அதை அனுமதித்தனர். இருந்தாலும் ஒரு சில இடங்களில் கிறிஸ்துவத்தை அவர்கள் தடை செய்தனர்.
தங்கள் சமுதாய பணிகளான- மருத்துவம், கல்வி, இலக்கியசேவை என பல வழிகளில் எல்லா மக்கள் மத்தியிலும் கிறிஸ்துவத்தை ப ற்றிய ஒரு நல்ல எண்ணத்தை உண்டு பண்ணியிருந்தனர். கத்தோலிக்கர்கள் மற்றும் புரோட்டஸ்டண்டு கிறிஸ்தவர்கள் நிறுவிய கல்வி கூடங்கள், மருத்துவமனைகள் மூலமாக அனைவரும் பயன் அடைந்துவந்தனர். உயர்ஜாதி மக்களுக்கு மட்டும் கல்வி என்று இருந்த நிலை மாறி, சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் கல்வி கிடைக்கும் படி செய்தனர். இதற்காக அவர்கள் செய்து வந்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி மிகவும் உதவியது. (இந்தியாவில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட வேதாகமம் தமிழ் வேதாகம்.) ஆங்கிலேய அரசாங்க பணிகளுக்கு ஆட்கள் தேவைப்பட்டதால் அவர்களும் இதை தடை செய்ய விரும்பவில்லை. ஒரு சில பகுதிகளில் மக்கள் ஒடுக்கப்பட்ட போது கிறிஸ்துவ மிஷனெரிகள் அதற்கு எதிராக குரல் கொடுத்தனர் அதற்காக அவர்கள் சிறை தண்டனையும் பெற்றனர்.
திராவிட பகுதிகளில் உள்ள மக்கள் எப்போதும் ஒரு திறந்த மனப்பான்மை உடையவர்களாய் இருந்தபடியால் பொதுவாக அவர்கள் கிறிஸ்துவத்தை எதிர்த்ததில்லை. இவ்வாறு பாரதத்தின் ஒரு பகுதியில் மட்டும் அதிவேகமாக நற்செய்தி பரவ தொடங்கியது.

வடக்கு தேய்ந்தது தெற்கு வாழ்ந்தது.
தற்போது உள்ள பெருளாதார சுழ்நிலையில் வட மாநிலங்களைவிட தென் மாநிலங்கள் நல்ல நிலையில் உள்ளன(ஒரு வேளை கணினி சார்ந்த துறைகளில் ஏற்பட்ட வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம்). அதேபோல் தான் கிறிஸ்தவமும்.
தென்பகுதியில் நற்செய்தி பரவத்தொடங்கிய அதே சமயத்தில் வடபகுதியின் சில பகுதிகளில் , குறிப்பாக கடலோரப் பகுதிகளிலும் ஒரளவு மக்கள் இயேசுவை ஏற்றுக் கொண்டனர். இருந்தாலும் அனேக பகுதிகளில் மிஷனெரிகள் எதிர்ப்பைச் சந்தித்தனர். வடபகுதியில் தென்பகுதியை விட அதிகமான ஜாதி அடுக்குகள் இருந்தன, தாழ்த்தப்பட்ட மக்கள் விலங்குகளை விட மிகக்கேவலமான முறையில் நடத்தப்பட்டனர். இதனால் அவர்கள் மெதுவாக கிறிஸ்துவத்தை நாடி வரத்தெடங்கினர். அவ்வாறு வருபவர்களில் ஒரு சில பேர் இரட்சிக்கப்பட்டு இயேசுவை பின்பற்றத் தொடங்கினர். இதன் காரணமாக வட இந்தியாவில் கிறிஸ்தவம் எனப்படுவது தாழ்த்தப்பட்ட மக்களின் மதமாக கருதப்பட்டது. மேலும் ஆங்கிலேயர்கள் மாட்டுக்கறி உண்பதால் அவர்களும் அவர்கள் மதமும் தாழ்த்தபட்டவர்களுடையதாக கருதப்பட்டது. தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களை பறைங்கியர் என்றும் கூறுவதன் காரணமும் கூட இதுதான். மேலும் இது தவிர அனேக காரணங்களை வட இந்தியாவில் நற்செய்தி பரவத்தடையாக இருந்ததாக கூற முடியும். ஆனால் அவ்வாறு கூறுவதற்கான எந்த அடிப்படை ஆதாரமும் என்னிடம் இல்லை.