|
மார்ஸ் மேடை |
|
|
|
|
Subject :..
22-04-2008 20:34:16
|
|
|
| josephsneha |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,173
Location: |
|
|
|
|
|
|
இஸ்ரவேலர் கானான் தேசத்துக்கு போனபின் ரூபன் மற்றும் மனாசே கோத்திரத்தார் யோர்தான் நதிக்கு இப்புறத்திலும் மற்ற கோத்திரத்தார் அப்புறத்திலும் குடியேறினர். தேவனுடைய ஆசரிப்புக்கூடாரம் ஒரு புறம் இருக்க ரூபன் மற்றும் மனாசே கோத்திரத்தார் எப்படி தங்களுடைய பலிகளை செலுத்தியிருப்பார்கள். ரூபன் மற்றும் மனாசே கோத்திரத்தார் ஒரு மாதிரி பலி பீடத்தை உருவாக்கியபோது மற்ற கோத்திரத்தார் அதை எதிர்த்தார்கள் என்று வாசிக்கிறோம் அல்லவா.[size=18:0e7549c2ca][/size:0e7549c2ca][color=red:0e7549c2ca][/color:0e7549c2ca] |
|
|
|
|
|
Subject :..
22-04-2008 15:16:21
|
|
|
| Rukmani |
|
| VIP Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 2,866
Location: |
|
|
|
|
|
|
சகோதரரே, உங்கள் கேள்வியை தமிழில் பதித்தால் நலமாக இருக்கும் |
|
|
|
|
|
Subject :doubt..
22-04-2008 14:34:05
|
|
|
| josephsneha |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,173
Location: |
|
|
|
|
|
|
What does the phrase "Each one had a harp and they were holding golden bowls full of incense, which are the [b:fd5a9046f2]prayers of the saints"[/b:fd5a9046f2] mean, I want to know about the significance of the highlighted words "prayer of the saints" |
|
|
|
|
|
Subject :hi..
21-04-2008 15:57:08
|
|
|
| josephsneha |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,173
Location: |
|
|
|
|
|
|
I have a doubt. After reaching Canan the tribe of Reuben along with manasse settled on the other side of River Jordan whereas other tribes on the other side, the tabernacle of God existed with them. Then how the people of Reuben would have offered their sacrifices. Remember there arose a dispute when the reubenites had built a replica of the altar on their land. |
|
|
|
|
|
Subject :..
07-04-2008 10:12:53
|
|
|
| ANA |
|
| புதிய பதிவர் |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 596
Location: |
|
|
|
|
|
[color=green:2f4434b85e][b:2f4434b85e]எனக்கு தெரிந்ததின் படி,
இரட்சிக்கப்படுதல் என்பது மறுபடியும் பிறப்பது( யோவான் 3:3). இதன் பொருள், சாத்தனுடைய ராஜ்ஜியத்திலிருந்து தேவனுடைய ராஜ்ஜியத்திற்குள் வருவது( லூக்கா 8:12), பாவ சுபாவம் நீங்கி தேவ சுபாவம் வருவது.
நீங்கள் கூறியது போல இரட்சிக்கப்பட,
தேவனை விசுவாசிக்க வேண்டும் (அப்போஸ்தலர் 16:31), அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ள வேண்டும், தேவனுடைய சித்தத்திற்கு நம்மை விட்டுக்கொடுக்க வேண்டும், நம்முடைய பாவத்தை அறிக்கையிட வேண்டும்( ரோமர் 10:10), "நான்" என்னும் அகம்பாவம் நம்மை விட்டு அகல வேண்டும். [/b:2f4434b85e][/color:2f4434b85e] |
|
|
|
|
|
Subject :ஒருவன் இரட்சிக்கப் பட என்..
06-04-2008 16:42:52
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
Subject :ஒருவன் இரட்சிக்கப் பட என்ன செய்ய வேண்டும்?
[color=darkred:ca8df6aa76][size=12:ca8df6aa76]தனது பதிலை பதித்த சகோ.சரவ் அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் நன்றி கூறிக் கொள்கிறேன். உங்களின் பதிலில் நாம் ஏற்கனவே இரட்சிக்கப் பட்டுஇருக்கிறோம் என்ற அடிப்படையில் பதிலளித்துள்ளீர்கள். நல்லது. ஆனால் நான் பொதுவான கேள்வியைத்தான் கேட்டுள்ளேன்.
ஒருவன் இரட்சிக்கப் பட என்ன செய்ய வேண்டும்?
னாம் இரட்சிக்கப் பட்டிருப்பது உண்மைதான். அதிச் சந்தேகம் இல்லை. ஆனால் நான் ஏற்கனவே சொன்ன படி மேற்கண்ட கேள்வியை நம்மிடம் யாராவது கேட்கும் போது நம் பதில்கள் பலவாக இருக்கின்றன. அத்துடன் நாம் சார்ந்திருக்கிற சபையின் உபதேசங்களையும் சொல்லுவது வழக்கமாக இருக்கிறது. உதாரணத்திற்கு சில காரியங்களை நான் பட்டியலிடுகிறேன்.
ஒருவன் இரட்சிக்கப் பட என்ன செய்ய வேண்டும்?
1.இயேசுவை விசுவாசிக்க வேண்டும்
2. சபைக்கு வர வேண்டும்
3. ஒழுங்காக வேதம் வாசிக்க வேண்டும்
4. தேவனுக்கு கீழ்படிய வேண்டும்
5. நகையை கழட்ட வேண்டும்
6. தினமும் ஜெபிக்க வேண்டும்
7. பரிசுத்தமாய் வாழ வேண்டும்.
மேலே சொல்லப் பட்டிருப்பவை சாம்பிள்தான். இன்னமும் பல காரியங்களை பலர் சொல்லுவார்கள். இவை எல்லாம் தவறு என்று நான் சொல்லவரவில்லை. மாறாக இரட்சிப்பு குறித்து வேதம் கூறுகிற காரியங்களை சரியான விதத்தில் நாம் அறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று நான் உணர்ந்திருக்கிறேன். ஆகவே நம் தள நண்பர்கள் உங்கள் கருத்தை தொடர்ந்து இக்கருப் பொருளில் பதிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தேவன் எனக்கு கற்றுதந்ததை நானும் பிற்பாடு விரிவாக பதிக்கலாமென்று இருக்கிறேன். நாம் இரட்சிப்பை குறித்த முழுமையான அறிவை அடையும் போது அதில் உள்ள ஆசீர்வாதங்களை சுதந்தரித்துக் கொள்வதற்கு அது ஏதுவாக இருக்கும். தேவனுக்கே மகிமை.[/size:ca8df6aa76][/color:ca8df6aa76] |
|
|
|
|
|
Subject :..
05-04-2008 22:39:26
|
|
|
| sarav |
|
| Senior user |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 342
Location: |
|
|
|
|
|
dear bro
my answer is
according to God''s plan
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே, 5. அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். 6. கிறிஸ்து இயேசுவுக்குள் அவர் நம்மிடத்தில் வைத்த தயவினாலே, தம்முடைய கிருபையின் மகா மேன்மையான ஐசுவரியத்தை வருங்காலங்களில் விளங்கச்செய்வதற்காக, 7. கிறிஸ்து இயேசுவுக்குள் நம்மை அவரோடேகூட எழுப்பி, உன்னதங்களிலே அவரோடேகூட உட்காரவும் செய்தார்
we are already saved and right now we have been seated with him. this was done before world''s foundation.but our conversion takes place only after we believe in blood of Lord Jesus Christ.
so now we are saved.
children of God.
Justified by the blood of Jesus.
seated along with him in heavenly place.
reconciled to God by the death of our Lord jesus Christ.
all these we recived by faith at the time we make covenant with God.
BUT according to 2pet 1;10-11
ஆகையால், சகோதரரே, [size=24:5547e22c46][color=green:5547e22c46]உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்[/color:5547e22c46][/size:5547e22c46]; இவைளை செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 11. இவ்விதமாய், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவினுடைய நித்திய ராஜ்யத்துக்குட்படும்பிரவேசம் உங்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்
we have to make sure of our calling and election. that is our part.
with love in Christ
sarav |
|
|
|
|
|
Subject :..
05-04-2008 00:04:29
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
[color=darkblue:cfe14480e6][size=16:cfe14480e6]ஒருவன் இரட்சிக்கப் பட என்ன செய்ய வேண்டும்?[/size:cfe14480e6][/color:cfe14480e6]
[color=red:cfe14480e6][size=12:cfe14480e6]
உங்களைப் பார்த்து ஒருவர் இந்தக் கேள்வியைக் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். என்னைப் பார்த்து ஒரு போதகர் சமீபத்தில் இந்த கேள்வியைக் கேட்டார். நாம் இரட்சிக்கப் பட்டவர்களாயிருந்தாலும் கூட நம்மிடம் நேரடியாக ஒரு கேள்வியைக் கேட்கும் போது சற்று தடுமாறி விடுகிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேன்டும். நானும் பல பதில்களைச் சொன்னேன். பிற்பாடு நான் தனிமையாக அமர்ந்து இது குறித்து சிந்தித்த போது ஒரு உண்மையை கண்டு கொண்டேன். அது என்னவெனில் நாம் பொதுவாக இந்தக் கேள்விக்கு பதிலைக் கூறும் போது இயேசுவை விசுவாசிக்க வேண்டும் என்பதோடுகூட நாம் சார்ந்திருக்கிற சபையின் உபதேசங்களையும் விசுவாசிக்க வேண்டும் என்கிற தொனியில்தான் பெரும்பாலும் நமது பதில் அமைந்து விடுகிறது. நிச்சயமாகவே இந்த கேள்வியின் பதில் நம்மில் பலருக்கு ஒரு தெளிவை அளிப்பதோடு மட்டுமல்லாது அனேகரை ஆண்டவரிடம் இரட்சிப்புக்கு நேராக வழி நடத்த ஏதுவாக இருக்கும் என்று விசுவாசிக்கிறேன். இனியுமென்ன தாமதம்? உங்களின் பதிலை உடனடியாக பதித்து விட வேண்டியதுதானே![/size:cfe14480e6][/color:cfe14480e6] |
|
|
|
|
|
Subject :Re: EVOLUTION VS CREATION..
25-03-2008 20:19:57
|
|
|
| mycoimbatore |
|
| VIP Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 2,730
Location: கோயம்புத்தூர்,தமிழ் நாடு,இந்தியா |
|
|
|
|
|
அருமையான விளக்கம் கொடுத்த அற்புதம் அவர்களுக்கு வாழ்த்துக்கள் |
|
|
|
|
|
|
Subject :EVOLUTION VS CREATION..
25-03-2008 13:49:41
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
[color=darkblue:2b0accf71b]CREATIONIST BELIEVE ONLY AFTER ADAM''S FALL DEATH COME TO EXISTENCE(PHYSICAL DEATH)THROUGH SIN.
IF WE SAY DEATH EXIST BEFORE ADAM"S FALL THEN WE ARE GOING AGAINST WORD OF GOD.[/color:2b0accf71b]
[size=12:2b0accf71b][color=red:2b0accf71b]சகோ.சரவ் அவர்கள் கேட்டிருப்பது நல்ல ஒரு கேள்வி
கிறிஸ்தவர்களிலேயே பலர் வேதாகமத்திற்கு விரோதமான பரிணாமக் கொள்கையை நம்புகின்றனர். அல்லது அதற்கு சரியான விளக்கம் கூற தெரியாமல் விழிக்கின்றனர். நானும் பல முறை பரிணாமக் கொள்கையைக் குறித்து வாசித்தேன். உண்மை என்ன தெரியுமா? வேதாகம விசுவாசத்தை நம்புவதை விட இந்த மாதிரியான நூதனமான காரியங்களை நம்புவதற்குதான் அதிக கடினமானதாகவும் அதிக விசுவாசம் தேவைப்படுகிறதாகவும் இருக்கிறது. இது பரிணாமக் கொள்கைக்கு மட்டுமல்ல கிறிஸ்தவத்தின் எளிமையான எளிய விசுவாசத்திற்கெதிரான எந்தக் காரியங்களுக்கும் பொருந்தும். சரி நாம் சகோ சரவ் அவர்களின் கேள்விக்கு வருவோம்.[/color:2b0accf71b]
[b:2b0accf71b][color=black:2b0accf71b]பாவத்திற்கு பின் தானே மரணம்?[/color:2b0accf71b][/b:2b0accf71b]
[color=red:2b0accf71b]நம்முடைய வேதாகமம் பாவத்தின் சம்பளம் மரணம் என்று திட்டவட்டமாகக் குறிப்பிடுவதை நாம் மறுக்கவே முடியாது. ஆதாமோடு சிருஸ்டிக்கப்பட்ட உயிரினங்கள் அவனுடைய வீழ்ச்சிக்குப் பின் ஏற்பட்ட நோவாகாலத்து பெரு வெள்ளத்தில் அழிந்து போயின என்பது வேதாகமம் சொல்லும் வரலாறு. இது உண்மைதான் நான் இதை மறுக்க வில்லை. ஆனால் இங்குதான் நாம் ஒரு காரியத்தை கவனமாக கவனிக்க வேண்டும். அது என்ன எல்லா உயிரினங்களும் அழிந்து போயிற்றா?
அதுதான் இல்லை. தேவன் நோவாவைப் பார்த்து உன்னோடு உன் குடும்பத்தையும் சகலவித மாம்சமான ஜீவன்களிலும் ஆணும் பெண்ணுமாக வகை ஒன்றுக்கு ஒவ்வொரு ஜோடு உன்னுடன் உயிரோடே காக்கப்படுவதற்கு, பேழைக்குள்ளே சேர்த்துக்கொள் என்று கூறுகிறதை நாம் ஆதி.6:19ல் வாசிக்கிறோம். இங்கு சகல ஜீவன்களும் என்று குறிப்பிட்டிருக்கிறதைக் கவனியுங்கள். அப்படியெனில் எப்படி நோவாவின் காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் இன்று இல்லாமல் போகக் கூடும்? அவை உயிரோடே காக்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்பினாரே![/color:2b0accf71b]
[color=blue:2b0accf71b][b:2b0accf71b]லூசிபரின் காலத்தில் உலகம்[/b:2b0accf71b][/color:2b0accf71b]
[color=blue:2b0accf71b]மனிதனின் சிருஸ்டிப்புக்கு முந்திய இந்த உலகத்தின் காரியங்கள் ஒரு மறை பொருளாகவே இருக்கின்றன. வேதாகமத்தில் அதுகுறித்து தெளிவாக விளக்கமாக கூற வசனங்கள் இலையெனினும் நாம் ஓரளவு நம் வேதாகமத்தில் உள்ள வசனங்களை வைத்து விளங்கிக் கொள்ள முடியும்.
சாத்தான் என்று சொல்லப் படுகிற லூசிபரைக் குறித்து நம் வேதாகமத்தில் ஏசாயா14 மற்றும் எசேக்கியேல் 28 அதிகாரங்களில் வாசிக்கிறோம். இவற்றில் உள்ள படி சாத்தான் அபிசேகம் பண்ணப்பட்ட ஒரு கேருப். ஏதேன் தோட்டத்தில் இருந்தவன். பெருமையினால் விழுந்து போனவன் என்று பல காரியங்களை இங்கு வாசிக்கிறோம்.
இந்த லூசிபர் பாவஞ்செய்ததினாலே அவன் தனது ஸ்தானத்திலே இருந்து விழுந்து போனான். அதாவது தேவனுடைய சமூகத்திலிருந்து மட்டுமல்ல ஏதேன் தோட்டத்திலிருந்தும் விரட்டப்பட்டான். ஆகவேதான் அவன் ஒரு பாம்பின் உடலில் புகுந்து அதன் மூலமாக ஏதேன் தோட்டத்திற்குள் நுழைந்தான். [/color:2b0accf71b]
[color=red:2b0accf71b]லூசிபர் காலத்தில்தான் பெரிய இராட்சத விலங்கினங்கள் வாழ்ந்தனவா?[/color:2b0accf71b]
[color=blue:2b0accf71b]நோவா காலத்தின் பெரு வெள்ளத்திற்கு முன் பூமியில் மழைக் காலம் குளிர் காலம் கோடைக் காலம் என்று பருவ காலங்கள் கிடையாது. பூமியை சுற்றிலும் ஒரு தண்ணீர் படலம் இருந்தது. ஆகவே பூமியில் சூரியனின் வெளிச்சம் மாத்திரமே வந்தது, சூரியனின் வெப்பம் பூமியை வந்தடைய வில்லை. இக்காரணத்தினால்தான் அக்காலத்தைய மனிதர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தனர். பூமியில் இப்படிப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை இருந்ததால் விலங்கினங்களும் இராட்சதமானவையாக இருந்தன என்பது அனேகர் கூறும் கருத்து. ஆனால் அக்காலத்தில் வாழ்ந்த உயிரினங்கள் எல்லாம் தான் நோவாவினால் காக்கப்பட்டதே! ஆகவே மேற்கண்ட இந்த கூற்று கேட்பதற்கு நலமாய் தோன்றினாலும் உண்மையாக இருப்பதற்கான சாத்தியத்தை வேதமே தள்ளி விடுகிறது.
லூசிபரின் காலத்தில்தான் இராட்சத உயிரினங்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பதை எப்படி நாம் நம்ப முடியும்? என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. நம் பரிசுத்த வேதாகமம் மனிதனைக் குறித்து சொல்லும் போது அவனை தேவ தூதரிலும் ச்ற்று சிறியவனாக்கினீர் என்று கூறுகிறது. ஆகவே மனிதனை விட எல்லா விதத்திலும் பெரியவர்களாய் இருந்த லூசிபரும் அவனைச் சார்ந்த தேவ தூதர்களும் வாழ்ந்த இந்த உலகில் அவர்களுக்கேற்றார் போல் இராட்சத உயிரினங்கள் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது என் கருத்து. ஒரு வேளை இதற்கு வேதத்தில் ஆதாரம் இல்லாவிடினும் இதைத்தவிர வேறு காரணங்கள் இருப்பதாக தெரியவில்லை. [/color:2b0accf71b]
[color=red:2b0accf71b]அவை எப்படி அழிந்தன?[/color:2b0accf71b]
[color=blue:2b0accf71b] பாவத்திற்கு முன் இயற்கையான மரணம் என்பது கிடையாது. ஆனால் சாத்தானின் வீழ்ச்சியினால் அவன் ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப் பட்ட போது தேவன் இந்த உலகில் அவன் வந்து வாசஞ் செய்ய முடியாத படி அதை கெடுத்து போட்டார். இது குறித்து எனது முந்திய பதிலிலும் கூறியிருக்கிறேன். தேவன் எப்படி கெடுத்துப் போட்டார்? ஏர்கனவே நல்ல குளிர்ச்சியான சூழ்நிலை நிலவிய இந்த உலகில் வெளிச்சமே தோன்றாதபடிக்கு காரிருளினால் இந்த உலகை நிரப்பினார். இவ்வுலகை காரிருள் சூழ்ந்து வெளிச்சம் இல்லாமல் போன படியால் பூமியானது பனியினால் உறைந்து போயிற்று. அதனால் உலகில் வாழ்ந்த எல்லா உயிரினங்களும் அழிந்து போயின.கவனிக்கவும் அவை இயற்கையாக மரிக்க வில்லை. பெரும் நாசத்தினால் அழிவினால் மரித்துப் போயின. சாத்தான் இருக்க இடமில்லாமல் அந்தரத்தில் தொங்க வேண்டியதாயிற்று. இன்றும் கூட டைனோசர் என்று சொல்லப்படுகிற விலங்கினங்களின் உடல்கள் நல்ல நிலையில் கிடப்பதற்கு காரணம் அவை பனியில் அன்று பதப்படுத்தப்பட்டதினால் தான் என்று நான் கருதுகிறேன். இமய மலை முன்பு ஆறாக இருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இமய மலையும் கூட அக்காலத்தில்தான் உறைந்து ஒரு பனிமலையாக மாறியிருக்கக் கூடும்.
பொதுவாக அறிவியல் விஞ்ஞானிகள் இன்று ஒரு காரியத்தை Hence proved என்று கூறி அதை ஏற்றுக் கொள்வர். பின்பு சில காலங்கள் கழித்து அதே காரியத்தை வேறொருவர் வேறு முறையில் கூறி Hence proved என்று கூறுவார். அதையும் விஞ்ஞான உலகம் ஏற்றுக் கொள்ளும்.(எத்தனை தடவை நாம் படிக்கும் போது Hence proved என்ற இந்த பதத்தை பயன் படுத்தியிருப்போம்.) ஆனால் வேதமோ ஒரு போதும் மாறுவதில்லை. அது காலங்களைக் கடந்து கம்பீரமாக நான் கூறுவதே உண்மை என்று பறை சாற்றுகிறது. அது நித்திய காலமாகவும் அவ்வாறே இருக்கும். ஆகவே நாம் அறிவியலார் கூறுவதையும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூற வர வில்லை. நல்ல அறிவியல் கண்டு பிடிப்புகளுக்காக நான் தேவனை ஸ்தோத்தரிக்கிறேன். ஆனால் பிரச்சனை என்று வரும் போது திறமையான விஞ்ஞானிகளின் கூற்றைக் காட்டிலும் வேதத்தின் கூற்றே இறுதியானது. அதை எவரும் மறுக்க முடியாது. மறுக்க முயற்சி கூட செய்ய கூடாது. [/color:2b0accf71b] [/size:2b0accf71b]
[size=14:2b0accf71b] [color=red:2b0accf71b] கர்த்தருடைய வேதம் குறைவற்றது,உம்முடைய நீதி நித்திய நீதி, உம்முடைய வேதம் சத்தியம். ஆமென். [/color:2b0accf71b]
[/size:2b0accf71b] |
|
|
|
|
|
Subject :..
24-03-2008 01:39:50
|
|
|
| sarav |
|
| Senior user |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 342
Location: |
|
|
|
|
|
dear arputham
your explanations are good.
but regarding your below statement i have some questions.
[b:e4868ab971]YOU HAVE QUOTE[/b:e4868ab971]
மிகப் பெரிய விலங்கினங்கள் வாழ்ந்ததாக அறிவியலார் சொல்லுவதெல்லாம் லூசிபரின் வீழ்ச்சிக்கு முன்னாக இந்த உலகத்தில் வாழ்ந்தவையே.
me too believed like what u have said but after i come know about some creation scientist and their writings i have changed my ideas about those big animals.
[size=24:e4868ab971][color=darkblue:e4868ab971]CREATIONIST BELIEVE ONLY AFTER ADAM''S FALL DEATH COME TO EXISTENCE(PHYSICAL DEATH)THROUGH SIN.
IF WE SAY DEATH EXIST BEFORE ADAM"S FALL THEN WE ARE GOING AGAINST WORD OF GOD.[/color:e4868ab971][/size:e4868ab971]
WE CAN ALSO START A SEPERATE TOPIC FOR EVOLUTION VS CREATION FOR FURTHER CLARIFICATION.
THEY (CREATIONIST) ALSO DON"T BELIEVE IN MILLIONS OF YEARS.
WITH LOVE IN CHRIST
SARAV |
|
|
|
|
|
Subject :சொல்ல மறந்த பதில்..
23-03-2008 15:56:27
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
[color=red:e990fb1950]
நான் எனது முந்தைய பதிலில் ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர் என்று சொன்னதைக் குறித்த ஒரு முக்கியமான காரியத்தை சொல்ல மறந்து விட்டேன். அதை இங்கு விளக்க விரும்புகிறேன்.
நம்முடைய தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை என்று
நாம் வேதாகமத்தில் வாசிக்கிறோம்(1யோவான்1:5). அதேவேளையில் அவருடைய பாதங்களுக்கு கீழாக காரிருள் இருந்தது (சங்கீதம் 18:9) என்று நாம் வாசிக்கிறோம். இதன் பொருள் என்ன? ஏசாயா 45:7 சொல்லப்பட்டுள்ள தீங்கு என்ற பதம் சாத்தானை மட்டும் குறிக்கிற ஒரு காரியம் அல்ல. அது எல்லாவிதமான அழிவுகளை, நாசங்களை ஆபத்துகளையும் குறிக்கிறது. தேவனுக்கு மகிமையுண்டாவதாக. தீங்கு எதுவாயிருந்தாலும் அவை நம் தேவனின் அதிகாரத்தின் கீழ்தான் இருக்கின்றன என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். ஆகவே எந்த தீங்கும் நம்மை சேதப்படுத்த முடியாது.அவை அவருடைய பாதங்களின் கீழ்தான். நாமோ அவரோடே கூட அவருக்கருகில். அப்படியென்றால் அந்த காரிருள் அதாவது தீங்கும் நம் பாதங்களுக்குக் கீழ்தானே! அல்லேலுயா.
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
ராஜாதி ராஜா கர்த்ததி கர்த்தா
எப்போதும் இருப்பவர் இனிமேலும் வருபவர்[/color:e990fb1950] |
|
|
|
|
|
Subject :Did God Create Evil?..
23-03-2008 01:44:07
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
[color=red:e2c3d2e744]ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.(ஏசாயா45:7)
ஏன் தேவன் இரண்டையும் படைத்தார்/உண்டாக்கினார்? பொதுவாக இருள் என்பது பிசாசை அல்லது பாவத்தை குறிக்கும் வார்த்தை. அப்படி என்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன? எந்த நோக்கத்தில்/ எதை இங்கு குறிப்பிடுகிறார்? [/color:e2c3d2e744]
[color=blue:e2c3d2e744]நாம் இந்த வசனங்களை வாசிக்கும் போது சில பிண்ணனி தகவல்களையும் அறிந்து கொள்வது நமக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
முதலாவதாக ஏசாயா 45ம் அதிகாரத்தில் உள்ள முதல் ஏழு வசனங்களும் 44ம் அதிகாரத்தின் தொடர்ச்சி ஆகும். உள்ளபடி பார்த்தால் 45ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்துதான் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று வேத பண்டிதர்கள் கூறுகின்றனர். (ஏனெனில் பழைய ஏற்பாட்டு ஆக்கியோன்கள் தாங்கள் எழுதும் போது நாம் இப்போது வாசிக்கிற விதமாக வசனம் வசனமாக எழுத வில்லை. பின்னாட்களில் தன் இவ்வாறு அதிகாரம் வசனம் என பகுக்கப்பட்டது.) ஏசாயா 44ஆம் அதிகாரத்தில் தேவன் தாம் யார் என்பதை விளக்குகிறதையும் இஸ்ரவேல் ஜனங்களுக்கு உதவி செய்யப்போகிற கோரேஸ் என்ற அரசனைக் குறித்து அவன் பிறப்பதற்கு 150 வருடங்களுக்கு முன்னதாகவே கூறுகிறதை நாம் வாசிக்கிறோம். அதன் தொடர்ச்சியாக 45ஆம் அதிகாரத்திலும் முதல் ஏழு வசனங்கள் உள்ளன. [/color:e2c3d2e744]
[color=red:e2c3d2e744]தேவன் ஏன் ஒளியை படைத்து இருளை உண்டாக்கினார்? [/color:e2c3d2e744]
[color=blue:e2c3d2e744]படைப்பது(create) என்பது இதுவரை இல்லாத ஒன்றை புதிதாக உண்டாக்குவது ஆகும். ஆனால் உண்டாக்குதல் (form) என்பது ஏற்கனவே உள்ள ஒன்றை வரச்செய்வது (bring into existence) என்று பொருள் கொள்ளலாம். இது ஆங்கிலத்தில் மிகவும் பொருள் படும் படியாக் உள்ளது. மேலும் நம் பதிலை தெரிந்து கொள்வதற்காக ஆதியாகமம் முதல் அதிகாரத்திற்கு செல்லலாமா?
ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது என்று நாம் வாசிக்கிறோம். இந்த வசனத்திலே பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது என்ற வசனம் எபிரேய மொழியில் வெறுமையுமாய் ஆயிற்று என்றுதான் இருக்கிறது என்று வேதபண்டிதர்கள் கூறுகின்றனர். இதை இங்கு சொல்ல காரணம் என்னவெனில் ஆதியாகமம் முதல் இரு வசனங்களுக்கும் மூன்றாம் வசனத்துக்கும் உள்ள கால இடைவேளி மிகவும் அதிகமானதாகும்.
ஏனெனில் தேவன் முதலில் இந்த உலகத்தை லூசிபர் என்று சொல்லப்பட்ட தமது பிரதான தூதர்களில் ஒருவனுக்குதான் கொடுத்திருந்தார். ஆனால் அவன் நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் தன் இருதயத்தில் சொன்ன போது தனது ஸ்தானத்திலிருந்து தள்ளப்பட்டுப் போனான்(ஏசாயா:14:12-15). பெருமையினால் விழுந்து போன அவனை தள்ளின தேவன் அவனுக்கு கொடுத்திருந்த பூமியை அவன் வந்து வாசம் செய்யாதபடி கெடுத்துப் போட்டார் அல்லது அதுவே கெட்டுப் போயிற்று.[பிசாசு தங்க இடமில்லாமல் இப்போது சுற்றிக் கொண்டிருக்கீறான். வானத்துக்கும் பூமிக்கும் நடுவே அவன் இளைப்பாற இடமில்லாமல் இருக்கிறான். ஆகவேதான் அவன் மைனிதர்களை பிடிக்கிறான்(மத்.12:450. ஆகவேதான் அவன் இயேசுவை வனத்துக்கும் பூமிக்கும் நடுவே மரத்தில் தொங்க விடச் செய்தான்.] மிகப் பெரிய விலங்கினங்கள் வாழ்ந்ததாக அறிவியலார் சொல்லுவதெல்லாம் லூசிபரின் வீழ்ச்சிக்கு முன்னாக இந்த உலகத்தில் வாழ்ந்தவையே. சரி. பூமி எவ்வாறு ஒழுங்கின்மையும் வெறுமையுமாயிற்று தெரியுமா? அதற்கான பதில் ஆதி.1:3ல் இருக்கிறது. இந்த பூமியின் மீது உண்டான இருளே அதை கெடுத்துப் போட்டது. பூமியில் வெளிச்சம் தோன்றாதபடியால் அதிலுள்ளவை அழிந்து போயின. பூமி பனியாய் உறைந்து போயிற்று. தேவ ஆவியானவர் ஜனத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார் என்பது உறைந்த ஜலத்தில் என்றே வருகிறது.
அந்த கெட்டுப் போன பூமியில் தேவன் தனது திட்டத்தை நிறைவேற்ற மனிதனை படைக்க விரும்பினார். அவன் கையில் பூமியை கொடுப்பதற்கு முன்பதாக அதை செம்மைப் படுத்துகிறதைதான் நாம் ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் பார்க்கிறோம். தேவன் முதலாவது வெளிச்சத்தை உண்டாகக்கடவது என்று சொல்லுவதை நாம் ஆதி.1:3ல் வாசிக்கிறோம். ஆனால் நாலாம் நாளில் தான் தேவன் சூரியனையும் சந்திரனையும் சிருஸ்டித்தார் என்று வாசிக்கிறோம். அதுவரைக்கும் ஒளியில் வாசஞ்செய்கிற தேவனுடைய வெளிச்சம் பூமியில் இல்லாதிருந்த படியால்தான் தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்கிறார். தேவனின் வெளிச்சம் பூமியில் உண்டானது(கவனிக்கவும் இங்கு வெளிச்சப் படைக்கப்படவில்லை). வெளிச்சம் இல்லையென்றால் இருள்தான். ஆதியாகமம் ஆரம்ப கதை மிகவும் சுவராசியமான கதையாகும். அதை நாம் சமயம் கிடைக்கும் போது வேறொரு இடத்தில் பார்க்கலாம். நாம் இப்போது நமது கேள்விக்கு வருவோம்.
இப்போது உண்டாக்குதல் மற்றும் படைத்தல் என்பதற்கான வேறுபாடு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். சரி ஏன் தேவன் நான் தான் ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன் என்று கூறுகிறார்?
அனேகர் நினைப்பது என்ன தெரியுமா? தேவன் நன்மைக்கு தேவனாக இருக்கிறார். தீமைக்கு காரணம் தீமைக்கென்று உள்ள கடவுளே . இது தவறான கருத்து ஆகும். தேவன் ஒருவரே. ஆனால் பல மதங்களில் இந்த தவறான கருத்து இருக்கிறது. முக்கியமாக இந்த தீர்க்கதரிசனம் சொல்லப்பட்ட மேதிய பெர்சிய ராஜ்ஜியத்தில் அப்படிபட்ட ஒரு நம்பிக்கை இருந்தது. ஆகவேதான் தேவன் இந்த இடத்தில் நானே இருளை உண்டாக்குகிறேன் என்று கூறுகிறார். இருள் எவ்வாறு உண்டாகிறது வெளிச்சம் இல்லாதபோதுதானே! ஆம் தேவன் உண்டாக்கிய வெளிச்சம் ஒரு இடத்தில் ஒருவருடைய வாழ்க்கையில் உண்டாகும் போது அங்கு இருள் உண்டாகிறது( மீண்டும் கவனியுங்கள்: இங்கு இருள் படைக்கப்படுவதில்லை) வெளிச்சம் இல்லாமயால் இருள் தோன்றுகிறது. ஆகவே நாம் இந்த வசனத்தின் அடிப்படையான தேவன் ஒருவரே! என்பதையும் வேறுரு இரட்சகர் இல்லை என்பதையும் புரிந்து கொள்ள தவறி விடக் கூடாது. அப்படியானால் இந்த உலகில் நடக்கும் எல்லா தீங்கிற்கும் தேவன் தான் காரணமா? வேதம் என்ன சொல்லுகிறது?
தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; அவரிடத்தில் யாதொரு மாறுதலும் யாதொரு வேற்றுமையின் நிழலுமில்லை என்று நாம் யாக்கோபு முதல் அதிகாரத்தில் வாசிக்கிறோம். இயேசு யோவான்10ஆம் அதிகாரத்தில் ஒரு திருடனைக் குறித்து சொல்லுகிறார். அந்த திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறான். வெறொன்றுக்கும் வரான்.(ஏனெனில் அவனுக்கு அதைத்தவிர வேறொன்றும் இப்போது தெரியாது. அல்லது அவனுடைய குறிக்கோள் இப்போது அதுவே. ஏனெனில் அவனுக்கு ஒரு காரியம் தெரியும். அது சீக்கிரம் தனக்கு நித்திய நியாயதீர்ப்பு நேரிடப் போகிறது. அப்போது தன்னோடு ஒரு கூட்டம் தூதர்கள் விழுந்து போனது போல ஏராளமான மனிதர்களும் வரவேண்டும். தண்டனை அனுபவிக்கவேண்டும் என்று அவன் விரும்புகிறான். அட. எவ்வளவு உயர்ந்த நோக்கம் பாருங்கள்) ஏதேன் தோட்டத்தில் ஒரு திருடனைப் போல திருட்டுத்தனமாக வந்த அவன் நயவஞ்சகமாக ஆதிப் பெற்றோரை ஏமாற்றினான். தான் முன்பு வசித்த இந்த உலகின் அதிகாரம் மனிதனுக்குக் கொடுக்கப்பட்டதை அவனால் தாங்கிக் கொள்ள முடிய வில்லை. ஆகவே அவன் அவர்களை ஏமாற்றி திருட்டுத்தனமாக இந்த உலகில் தன் இழந்துபோன அதிகாரத்தை அவர்கள் மூலமாக பெற்றுக் கொண்டான். அவனே இந்த உலகில் அழிவையுண்டாக்கி தேவனுக்கு பிரியமான மனுக் குலத்தை அழிக்க முயற்சிக்கிறான். தேவனுக்கு மகிமையுண்டாவதாக! அவனுடைய அறிவை நச்சுக்கும் படியாக இயேசுவை தேவன் உலகில் அனுப்பினார். அவரிடம் அவன் திட்டம் செல்லுபடியாகவில்லை. இயேசு அவன் தலையை சிலுவையில் காலால் நசுக்கினார். சாத்தானை தமது உயிர்த்தெழுதலில்னான் ஜெயித்தார். ஆகவே அவன் இன்று மூளை குழம்பினவனாக சுற்றிக் கொண்டிருக்கிறான். அல்லேலுயா!
ஆகவே தேவன் யார் என்பதையறிந்து நாம் நம்முடைய வாழ்வில் அவரின் தீபத்தை ஏற்றுவோம். இந்த உலகில் உள்ள இருளை நீக்குவோம் அவரின் ஒளியால்(மத்.5:14- 16).
இந்த வசனத்தின் அடிப்படையில் உள்ள ஒரு சிறப்பான உரையாடல் நகைச்சுவைப் பகுதில் வெளியிடப்பட்டுள்ளது.
http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=12620#12620 [/color:e2c3d2e744] |
|
|
|
|
|
Subject :..
22-03-2008 22:33:14
|
|
|
| sarav |
|
| Senior user |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 342
Location: |
|
|
|
|
|
dear brothers
some of the secrets always belongs to God we should be careful when dealing with these subjects.
[size=18:29754a8838][color=darkred:29754a8838]revealed truths are useful to humanity therefore before going to secrets truths of God let us make efforts to become effective in revealed truths.this is my humble suggestion.[/color:29754a8838][/size:29754a8838]
i will give some thoughts about above question in coming days.
with love in Christ
sarav |
|
|
|
|
|
Subject :..
19-03-2008 15:43:19
|
|
|
| arputham |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,120
Location: bangalore |
|
|
|
|
|
[quote:c5fe8bb05c="ramarn"]
[color=olive:c5fe8bb05c][size=12:c5fe8bb05c]இங்கு கர்த்தர் ஒளியை படைத்தார்(create) என்றும், இருளை உண்டாக்கினார்(make) என்றும் ஏசாயா 45:7ல் சொல்லப்பட்டுள்ளது.
படைத்தல் என்பதற்கும் உண்டாக்குதல் என்பதற்கும் என்ன வேறுபாடு?
ஏன் தேவன் இரண்டையும் படைத்தார்/உண்டாக்கினார்?
பொதுவாக இருள் என்பது பிசாசை அல்லது பாவத்தை குறிக்கும் வார்த்தை. அப்படி என்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன? எந்த நோக்கத்தில்/ எதை இங்கு குறிப்பிடுகிறார்?[/size:c5fe8bb05c][/color:c5fe8bb05c][/quote:c5fe8bb05c]
[color=blue:c5fe8bb05c]உலகத்தில் உள்ள பெரும்பான்மையோரின் உள்ளத்தில் பொதிந்து கிடக்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாகும். பல வேளைகளில் கடவுள் மறுப்பு இயக்கத்தினர் இதைக் காட்டி வாதடுவதும் உண்டு. பொதுவாக ஒரு தீமை அல்லது அழிவு வரும் போது கட்வுள் மீதுள்ள நம்பிக்கை பலருக்கும் ஆட்டம் காணுவதுண்டு. நல்ல தேவன் தீமையும் செய்வாரா? ஐயோ! ஏன் இந்த தீமை என்று புலம்புவோர் பலர். தீமை நேர்ந்தால் கடவுளுக்கு கண் இல்லையா? என்று கடவுளை தூற்றுவர். சரி விசயத்துக்கு வருவோம். இங்கே கேட்கப்பட்ட கருகலான கேள்விக்கான விடையை எளிமையாக தர விரும்புகிறேன். எனது பதிலுக்கு சற்று காத்திருக்கவும். Others answers may give me some thoughts[/color:c5fe8bb05c] |
|
|
|
|
|
Subject :..
19-03-2008 13:44:48
|
|
|
| Rukmani |
|
| VIP Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 2,866
Location: |
|
|
|
|
|
[color=blue:8c55f5429c][b:8c55f5429c]சகரியா 3:1[/b:8c55f5429c] அவர் பிரதான ஆசாரியனாகிய யோசுவாவை எனக்குக் காண்பித்தார்; அவன் கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்றான்; சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான்.
2. அப்பொழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; சாத்தானே, எருசலேமைத் தெரிந்துகொண்ட கர்த்தர் உன்னைக் கடிந்துகொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
3. யோசுவாவோவெனில் அழுக்கு வஸ்திரம் தரித்தவனாய்த் தூதனுக்கு முன்பாக நின்றிருந்தான்.
4. அவர் தமக்கு முன்பாக நிற்கிறவர்களை நோக்கி: இவன்மேல் இருக்கிற அழுக்கு வஸ்திரங்களைக் களைந்துபோடுங்கள் என்றார்; பின்பு அவனை நோக்கி: பார் நான் உன் அக்கிரமத்தை உன்னிலிருந்து நீங்கச்செய்து, உனக்குச் சிறந்த வஸ்திரங்களைத் தரிப்பித்தேன் என்றார்.
5. அவன் சிரசின்மேல் சுத்தமான பாகையை வைப்பார்களாக என்றார்; அப்பொழுது சுத்தமான பாகையை அவன் சிரசின்மேல் வைத்து, அவனுக்கு வஸ்திரங்களைத் தரிப்பித்தார்கள். கர்த்தருடைய தூதன் அங்கே நின்றார்.
6. கர்த்தருடைய தூதன் யோசுவாவுக்குச் சாட்சியாக:
7. சேனைகளின் கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால்: நீ என் வழிகளில் நடந்து என் காவலைக் காத்தால், நீ என் ஆலயத்தில் நியாயம் விசாரிப்பாய்; என் பிராகாரங்களையும் காவல்காப்பாய்; இங்கே நிற்கிறவர்களுக்குள்ளே உலாவுகிறதற்கு இடம் நான் உனக்குக் கட்டளையிடுவேன்.
8. இப்போதும், பிரதான ஆசாரியனாகிய யோசுவாவே, நீ கேள்; உனக்கு முன்பாக உட்கார்ந்திருக்கிற உன் தோழரும் கேட்கக்கடவர்கள்; இவர்கள் அடையாளமாயிருக்கிற புருஷர்; இதோ, கிளை என்னப்பட்டவராகிய என் தாசனை நான் வரப்பண்ணுவேன்.
9. இதோ, நான் யோசுவாவுக்கு முன்பாக வைத்த கல்; இந்த ஒரே கல்லின்மேல் ஏழு கண்களும் வைக்கப்பட்டிருக்கிறது; இதோ, நான் அதின் சித்திரவேலையை நிறைவேற்றி இந்ததேசத்தில் அக்கிரமத்தை ஒரேநாளிலே நீக்கிப்போடுவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.[/color:8c55f5429c]
தேவன் நீதியுள்ள நியாயாதிபதி, அவர் கண்டிப்பாக சத்தியத்தின்படியும், நீதியின்படியும் நியாயம் விசாரிக்கவேண்டும் என்பது நீதி. அப்போது நம்முடைய பாவங்களுக்காக நாம் தண்டிக்கப்படுவோமே! தேவன் சத்தியத்தின்படி நீதி செய்யவேண்டுமே!
ஆம், நாம் குற்றவாளிகள் தான், பாவிகள் தான், என்ன செய்வோம்? பயம் நம்மை வாட்டுமே! தேவ சபையில் நம்முடைய பாவங்களுக்காக, அக்கிரமங்களுக்காக, மீறுதல்களுக்காக நம்முடைய குற்றங்களை சுமந்து தலை கவிழ்ந்து, கட்டப்பட்டவர்களாக நிற்கும் போது ஒரு அற்புதம் நடக்கிறது. நம்முடைய கர்த்தாதி கர்த்தர், ராஜாதி ராஜாவான இயேசு கிறிஸ்து, பிதாவாகிய தேவனுக்கு முன்பாகவும், தூதர்களுக்கு முன்பாகவும், சாத்தானுக்கு முன்பாகவும் எழுந்து, நமக்காக வாதாடுவார்.
இவர்கள் குற்றவாளிகள் தான். பாவிகள் தான் ஆனால், என்னுடைய இரத்தினாலே இவர்களுடைய பாவங்களையும், அக்கிரமங்களையும், மீறுதல்களையும் நான் சுமந்தேன் என்று சொல்லி நமக்காக கையொப்பம் இடுகிறார். நம்முடைய கந்தையான, அழுக்கான வஸ்திரம் இப்போது இயேசு கிறிஸ்துவின் இரத்ததினால் சிறந்த வஸ்திரமாய் மாறப்போகிறது. என்ன ஆனந்தம், இதைத்தான் வேதம் கூறுகிறது "ஏசாயா 26:8 கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது"
நம்முடைய பாவங்களை அவருடைய இரத்தினால் கழுவி, அதை அவருடைய நாமத்தினால் மன்னிப்பது எவ்வளவு சந்தோஷமான காரியம். |
|
|
|
|
|
Subject :..
19-03-2008 13:15:50
|
|
|
| Rukmani |
|
| VIP Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 2,866
Location: |
|
|
|
|
|
சகோ. ஆபெத் சிங் கேட்ட கேள்விக்கு சகோ. அற்புதம் அவர்கள் அற்புதமான முறையில் அநேக சத்தியங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். நன்றிகள் அற்புதம் அவர்களே!
[color=green:a61f3bcc97]I பேதுரு 4:5 உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் நியாயத்தீர்ப்புக்கொடுக்க ஆயத்தமாயிருக்கிறவருக்கு அவர்கள் கணக்கொப்புவிப்பார்கள்.[/color:a61f3bcc97]
[color=green:a61f3bcc97]யூதா 1:14 ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும்[/color:a61f3bcc97]
சகோ. அற்புதம் கூறியவண்ணம், பூமியில் உள்ள அனைவருக்கும் நியாயத்தீர்ப்பு உண்டு என்பதும், நாம் நியாயந்தீர்க்கபடும்போது கணக்கு ஒப்புவிக்கவேண்டும் என்பதும் நிச்சயம்.
ஆனால் இரட்சிக்கப்பட்டவர்கள் கலங்க வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் கிறிஸ்து இயேசுவுக்குட்பட்டவர்களாயிருந்து, மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை என்று வேதம் தெளிவாக கூறுகிறது.
[color=blue:a61f3bcc97]I யோவான் 4:17 நியாயத்தீர்ப்புநாளிலே நமக்குத் தைரியமுண்டாயிருக்கத்தக்கதாக அன்பு நம்மிடத்தில் பூரணப்படுகிறது; ஏனென்றால், அவர் இருக்கிறபிரகாரமாக நாமும் இவ்வுலகத்தில் இருக்கிறோம்[/color:a61f3bcc97]
இயேசு கிறிஸ்து என்னும் அன்பு நம்மில் பூரணப்பட்டிருந்தால், நியாயத்தீர்ப்புநாளிலே நமக்கு தைரியமுண்டாயிருக்கும் என்று வேதம் கூறுகிறது.
(சங்கீதம் 119:175) உமது நியாயத்தீர்ப்புகள் [b:a61f3bcc97]எனக்கு உதவியாயிருப்பதாக [/b:a61f3bcc97]என்றும்
(சங்கீதம் 48:11) உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் சீயோன் பர்வதம் [b:a61f3bcc97]மகிழ்வதாக, [/b:a61f3bcc97]யூதாவின் குமாரத்திகள் [b:a61f3bcc97]களிகூருவார்க[/b:a61f3bcc97]ளாக என்றும்
(சங்கீதம் 97:8) சீயோன் கேட்டு [b:a61f3bcc97]மகிழ்ந்தது[/b:a61f3bcc97]; கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளினிமித்தம் யூதாவின் குமாரத்திகள் [b:a61f3bcc97]களிகூர்ந்தார்கள்[/b:a61f3bcc97] என்றும்
(சங்கீதம் 119:39) நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் [b:a61f3bcc97]நல்லவைகள் [/b:a61f3bcc97]
என்றும் வேதம் கூறுகிறது. |
|
|
|
|
|
Subject :..
19-03-2008 13:09:40
|
|
|
| ramarn |
|
| Senior user |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 268
Location: |
|
|
|
|
|
[color=green:2a3e000ddf][size=13:2a3e000ddf]ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர். - ஏசாயா 45:7[/size:2a3e000ddf][/color:2a3e000ddf]
[color=olive:2a3e000ddf][size=12:2a3e000ddf]இங்கு கர்த்தர் ஒளியை படைத்தார்(create) என்றும், இருளை உண்டாக்கினார்(make) என்றும் சொல்லப்பட்டுள்ளது.
படைத்தல் என்பதற்கும் உண்டாக்குதல் என்பதற்கும் என்ன வேறுபாடு?
ஏன் தேவன் இரண்டையும் படைத்தார்/உண்டாக்கினார்?
பொதுவாக இருள் என்பது பிசாசை அல்லது பாவத்தை குறிக்கும் வார்த்தை.
அப்படி என்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன? எந்த நோக்கத்தில்/ எதை இங்கு குறிப்பிடுகிறார்?
என் தேவன் ஒளியாயிருக்கிறார். அவரில் எவ்வளவேனும் இருளில்லை என்று நான் விசுவாசிக்கிறேன். - 1 யோவான் 1:5[/size:2a3e000ddf][/color:2a3e000ddf] |
|
http://www.ramarn7.blogspot.com |
|
|
|
|
|
Subject :..
17-03-2008 18:51:19
|
|
|
| mycoimbatore |
|
| VIP Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 2,730
Location: கோயம்புத்தூர்,தமிழ் நாடு,இந்தியா |
|
|
|
|
|
இந்த பகுதியில் நல்ல ஆழமான பதில்களை அழகாக கொடுத்து வரும் அற்புதம் அவர்களுக்கு நன்றி |
|
|
|
|
|
|
Subject :..
17-03-2008 14:03:51
|
|
|
| manojoalex |
|
| Elite Member |
 |
Joined: 30-11-1999 00:00:00
Posts: 1,453
Location: |
|
|
|
|
|
சிறப்பான பதிவு நன்றி போதகர் அற்புதம் அவர்கலே |
இயேசுவை அறி 
இயேசுவை அறிவி |
|
|
|
|