Tamil Christian Songs

Download MP3 Song, News, Music, Audio and Video

Friday
Sep 10th
Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home மார்ஸ்மேடை விவாதங்கள் Re:பால் தினகரன் ...
 மார்ஸ் மேடை
Welcome Guest   [Register]  [Login]
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 30-07-2010 03:47:49 
chillsam
Elite Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 526
Location: chennai
 
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

தானும் நுழையாமல் அடுத்தவனும் நுழையா வண்ணம் தடுப்போரை "அடையாளம் காட்டும் பணி"யும் பரலோகத்துக்கடுத்த காரியமென்றே அடியேன் கருதுகிறேன்..!

நண்பர் கொல்வின் அவர்களைப் போன்ற எண்ணற்ற ஆத்துமாக்களுக்கு இடறலான இதுபோன்ற ஊழியத்தை நம் தலைமுறையினர் நிச்சயம் வேரறுப்பர்;

சாதுசுந்தர்சிங் போன்றோரின் பொற்காலம் மீண்டும் துளிர்த்து "யௌவன ஜனம்" பிறக்கும்..!
IP Logged
"Praying for your Success"
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 19-07-2010 11:46:41 
thomasraju
New User
Joined: 30-11-1999 05:30:00
Posts: 23
Location
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

பரலோகத்துக்கடுத்த காரியங்களைப் பற்றி பேசுவோமே …………….
இதையெல்லாம் ………….
IP Logged
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 06-07-2010 03:06:28 
robin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 220
Location
 
  • 4294967294
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

இந்த மாதிரி இப்போ நிறையபேர் கிளம்பி இருக்கிறார்கள்.
மக்களின் அறியாமையும், பயத்தையும், பேராசையையும் பயன்படுத்தி கொள்ளையடிக்கிறார்கள்.
IP Logged
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 05-07-2010 17:07:17 
vashni
Junior Member
Joined: 05-07-2010 10:26:18
Posts: 30
Location: Srilanka
 
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

இந்த நூற்றாண்டின் இணையற்ற ........ இப் புனைப்பெயரையே நான் விரும்பவில்லை.

கடந்த நூற்றாண்டில் ..... இனி அடுத்து வரும் சந்ததிக்கான அடுத்த நூற்றாண்டில்....... ?

எப்படியோ தேவன் துன்மார்க்கரையும் சன்மார்க்கரையும் தமது மேலான நோக்கத்திற்காக வைத்து வைத்திருக்கின்றார். அதுவரைக்கும் சந்தோஷம்தான்!

-நலன்விரும்பி.
IP Logged
http://www.facebook.com/home.php?#!/vashni.inpanathannull
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 04-07-2010 01:44:03 
colvin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 322
Location: Colombo
  
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

தினகரன் அன் கோ இலங்கையில் சமாதானப் பெருவிழாவினை நடத்தியவர்கள். சில வருடங்களுக்கு முன் இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த சமயம் இதோ ஆண்டவர் உரைக்கிறார். இனி இலங்கையில் யுத்தமே இல்லை. ஆண்டவர் சமாதானத்தினால் இந்த தீவை நிரப்புகின்றார் என்று ஆண்டவர் பெயரால் இலட்சக்கணக்கானவர்கள் முன்னிலையில் தீர்க்கதரிசனம் உரைத்தார்.

பல அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், படைஅதிகாரிகள், மாற்றுமதத்தினர் கூடியிருக்கும் வேலையிலும் எவ்வாறு இவ்வாறாக பொய்யாக தீர்க்கதரிசனம் உரைத்தார் என தெரியவில்லை. ஆண்டவர் பெயரை, ஆவியானவரின் பெயரை பாவிப்பது இவர்களுக்கு பொழுதுபோக்காக போய்விட்டது.
இவர்களின் இச்செயல்களினால் தேவனின் நாமம் தூஷிக்கப்படுவதற்கே இவர்கள் காரணமாக இருந்துள்ளார்கள். எனக்கொன்றும் இவர்கள் மீது பெரிய அபிமானம் கிடையாது. தற்போதும் கூட இவர்களின் இணையத்தளங்களில் தீரக்கதரிசனங்கள் என்ற பெயரில் கேலிக்கூத்தான விடயங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தகையவர்கள் முதலில் ஆண்டவரால் தொடப்பட ஜெபிப்போம்.
IP Logged
Last Edited On: 04-07-2010 01:44:03 By colvin for the Reason
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 03-07-2010 23:29:49 
johnwesli
New User
Joined: 30-11-1999 05:30:00
Posts: 17
Location
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

"ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுகிறவர்கள் இருப்பார்கள்" என்று காமராசர் அவர்கள் சொன்னது இந்த விஷயத்திலும் சாலப் பொருந்தும். எல்லாவற்றிற்கும் முடிவு உண்டு.
IP Logged
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 30-03-2010 05:03:09 
drpethuru
Super User
Joined: 30-11-1999 05:30:00
Posts: 1,196
Location
 
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

”இணையற்ற தீர்க்கத்தரிசி” பால் தினகரன் குறித்து சகோ. சில்சாமின் ஆதங்கத்தை அவரது தளத்தில் முழுமையாகப் படித்தேன். உணர்வுகளின் துடிப்பிலும், கண்ணியமான
வார்த்தைகளையே கையாண்டிருக்கிறார். இதன் பின்னரும் பால் தினகரன் மற்றும் அவரது அனுதாபிகள் (மனந்)திருந்த(ம்ப)வில்லையென்றால்,
தேவன் நியாயந்தீர்ப்பார்.

சகோ. சில்சாம் அவர்களே, “இணையற்ற தீர்க்கதரிசி” என்பது சகோ. பால் தினகரனுக்கு முற்றிலும் பொருத்தமான பட்டம் தான். ஏனென்றால், இவரை(ர்களை) போல்
கிறிஸ்தவ உலகில் தீர்க்கதரிசனம், ஊழியம் என்ற பெயரில் (பண)மோசடி செய்ததில் இவர்(கள்) அளவிற்கு இதுவரை எவரும் இல்லையே.
IP Logged
Last Edited On: 30-03-2010 05:03:09 By drpethuru for the Reason
 Subject : தீர்க்கதரிசி.?.. 29-03-2010 14:51:03 
arputham
Elite Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 640
Location: bangalore
அப்பொழுது கர்த்தர் என்னை நோக்கி: தீர்க்கதரிசிகள் என் நாமத்தைக்கொண்டு பொய்யாய்த் தீர்க்கதரிசனஞ் சொல்லுகிறார்கள்.
நான் அவர்களை அனுப்பினதுமில்லை, அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்களோடே பேசினதுமில்லை; அவர்கள் கள்ளத் தரிசனத்தையும்,
கள்ள சகுனத்தையும், இல்லாத விசேஷத்தையும், தங்கள் இருதயத்தின் கபடத்தையுமே, உங்களுக்குத் தீர்க்கதரிசனமாய்ச் சொல்லுகிறார்கள்.
ஆதலால், நான் அனுப்பாதிருந்தும், என் நாமத்தைக்கொண்டு தீர்க்கதரிசனஞ்சொல்லி, இந்தத் தேசத்திலே பட்டயமும் பஞ்சமும்
வருவதில்லையென்கிற தீர்க்கதரிசிகளைக்குறித்து: இப்படிப்பட்ட தீர்க்கதரிசிகள் பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் சாவார்கள். (எரேமியா 14:14,15)

உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள்; அவர்கள் உங்களை வீண்பெருமை கொள்ளும்படி
செய்கிறார்கள்; கர்த்தருடைய வாக்கை அல்ல, தாங்கள் யூகித்த தரிசனத்தைச் சொல்லுகிறார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 23:16)

சொப்பனங்கண்ட தீர்க்கதரிசி சொப்பனத்தை விவரிப்பானாக; என் வார்த்தையுள்ளவனோ, என் வார்த்தையை உண்மையாய்ச் சொல்வானாக;
கோதுமைக்குமுன் பதர் எம்மாத்திரம்? என்று கர்த்தர் சொல்லுகிறார். என் வார்த்தை அக்கினியைப்போலும், கன்மலையை நொறுக்கும்
சம்மட்டியைப்போலும் இருக்கிறதல்லவோ? என்று கர்த்தர் சொல்லுகிறார். ஆகையால், இதோ, ஒவ்வொருவராய்த் தன்தன் அயலாரிடத்தில்
என் வார்த்தையைத் திருட்டுத்தனமாய் எடுக்கிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ, தங்கள் நாவின் சொல்லையே
வழங்கி, அவர் அதை உரைத்தார் என்று சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார். இதோ,
பொய்ச்சொப்பனங்களைத் தீர்க்கதரிசனமாகச் சொல்லி, அவைகளை விவரித்து, என் ஜனத்தைத் தங்கள் பொய்களினாலும்,
தங்கள் வீம்புகளினாலும், மோசம்போக்குகிறவர்களுக்கு நான் விரோதி என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் அவர்களை அனுப்பினதுமில்லை,
அவர்களுக்குக் கற்பித்ததுமில்லை; அவர்கள் இந்த ஜனத்துக்கு ஒரு பிரயோஜனமாய் இருப்பதுமில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 2328-32)

மேலும், உங்கள் நடுவிலிருக்கிற உங்கள் தீர்க்கதரிசிகளும் உங்கள் குறிகாரரும் உங்களை மோசம்போக்கவொட்டாதிருங்கள்;
சொப்பனம் காணப்பண்ணுகிற உங்கள் சொப்பனக்காரருக்குச் செவிகொடாமலும் இருங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய
சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் நாமத்தைச் சொல்லி உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் உரைக்கிறார்கள்;
நான் அவர்களை அனுப்பினதில்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். (எரேமியா 29:8,9)

தங்கள் இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவர்களோடே நீ சொல்லவேண்டியது என்னவென்றால்:
கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள். கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறதாவது: தாங்கள் ஒன்றும் தரிசியாதிருந்தும், தங்களுடைய
ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ! இஸ்ரவேலே, உன் தீர்க்கதரிசிகள் வனாந்தரங்களிலுள்ள நரிகளுக்கு
ஒப்பாயிருக்கிறார்கள். நீங்கள் கர்த்தருடைய நாளிலே யுத்தத்தில் நிலைநிற்கும்படிக்கு, திறப்புகளில் ஏறினதுமில்லை;
இஸ்ரவேல் வம்சத்தாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை. . கர்த்தர் தங்களை அனுப்பாதிருந்தும், கர்த்தர் உரைத்தாரென்று சொல்லி,
அவர்கள் அபத்தத்தையும் பொய்க்குறியையும் தரிசித்து, காரியத்தை நிர்வாகம்பண்ணலாமென்று நம்பிக்கையாயிருக்கிறார்கள்.
நான் உரைக்காதிருந்தும், நீங்கள் கர்த்தர் உரைத்தார் என்று சொல்லும்போது, அபத்தமான தரிசனையைத் தரிசித்து,
பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா? ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால்;
நீங்கள் அபத்தமானதைச் சொல்லி பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு விரோதமானவர்
என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார். (எசேக்கியேல் 13: 2-8)

இன்னும் வரும்..............
IP Logged
 Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர.. 29-03-2010 00:24:51 
robin
Senior Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 220
Location
 
  • 4294967294
Subject :Re:பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

தீர்க்கதரிசிகள் என்று யார் வேண்டுமென்றாலும் தங்களை அழைத்துக்கொள்ளலாம், முட்டாள்கள் இருக்கும்வரை.
IP Logged
 Subject :பால் தினகரன் இணையற்ற தீர்.. 30-03-2010 06:04:04 
chillsam
Elite Member
Joined: 30-11-1999 05:30:00
Posts: 526
Location: chennai
 
Subject :பால் தினகரன் இணையற்ற தீர்க்கதரிசியா..?

paul.jpg


அண்மையில் இயேசு அழைக்கிறார் நிகழ்ச்சியில் இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசியான பால் தினகரன் என்று அவரைக் குறித்து புகழுரையுடன் அவருடைய ஜெபத்தின் மூலம் அற்புதம் பெற்றவரின் அனுபவங்களைப் பகிர்ந்துக் கொண்டனர்;ரொம்ப ச‌ந்தோஷம்..!

ஆனால் எனது வருத்தம் என்னவெனில் "இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி "எனும் அவரைக் குறித்த அறிமுகமே; ஏனெனில் அவரையும் இவ்வாறே குறிப்பிட்டனர்;

அவரது தகப்பனாரையே இவர் மிஞ்சிவிட்டார் என்று அர்த்தமா அல்லது கடந்த நூற்றாண்டுக்கு அவரும் இந்த நூற்றாண்டு இவரும் என்று அர்த்தமா..?

"இந்த நூற்றாண்டின் இணையற்ற தீர்க்கதரிசி" என்பது ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு மட்டுமே சொந்தமான பட்டப்பெயரா?

"இணையற்ற" வார்த்தையின் பொருளும் அதன் ஆழமும் அறிந்தே அவ்வாறு பயன்படுத்துகின்றனரா?


http://chillsam.activeboard.com/forum.spark?aBID=134567&p=3&topicID=34881078
IP Logged
Last Edited On: 30-03-2010 06:04:04 By chillsam for the Reason
"Praying for your Success"
Page # 


Powered by ccBoard